ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

Thoothukudi district Recruitment : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியாளர் ( Out Reach Worker) பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பவுள்ளன.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
புறத்தொடர்பு பணியாளர் ( Out Reach Worker)1ரூ.10,592

வயது வரம்பு:

விண்ணப்பதார்கள் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது

தகுதிகள்:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் இருக்க வேண்டும். பணி அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://thoothukudi.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் கல்வி, வயது மற்றும் முன் அனுபவம் குறித்த சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

Also Read : நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலை : 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

176, முத்துச் சுரபு பில்டிங்,

மணிநகர் 2 வது தெரு, பாளை ரோடு,

தூத்துக்குடி 628 003.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.01.2023

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

First published:

Tags: Employment news, Jobs, Tamil Nadu Government Jobs