முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 8ம் வகுப்பு தேர்ச்சியா? தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி

8ம் வகுப்பு தேர்ச்சியா? தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி

காட்சிப் படம்

காட்சிப் படம்

விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக அணுகி விண்ணப்பம் பெற வேண்டும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப் பட இருக்கின்றன. குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிட விவரம்: 

காலியிடங்கள் எண்ணிக்கை2
கல்வித் தகுதி8ம் வகுப்புத் தேர்ச்சி
சம்பள நிலைரூ. 15,700 முதல் 50,000 வரை (நிலை-1)
இனசுழற்சி மற்றும் முன்னுரிமைபிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாம் அல்லாதோர்) முன்னுரிமை பிரிவு;பொது பிரிவினர் ஆதரவற்றோர் விதவை
வயது வரம்புகுறைந்தபட்ச வயது - 18அதிபட்ச வயது: பொதுப்பிரிவினர் - 32, பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 34, பட்டியல் கண்ட பிரிவினர்/பழங்குடியினர்/ ஆதரவற்ற விதவை பிரிவினர் - 37.

விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக அணுகி விண்ணப்பம் பெற வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி மாலை 5.45க்குள் அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மணிமண்டபம் எதிரில், தஞ்சாவூர் என்ற முகவரியில் உரிய ஆவணங்களுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதையும் வாசிக்க10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தமிழ்நாடு அஞ்சல் துறை அலுவலகங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

மார்ச் 21 மாலை 5.45 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் சரியாக பூர்த்தி செய்யப்படாத அல்லது உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பர அறிக்கையை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ உதவி இயக்குநருக்கு முழு அதிகாரம் உண்டு என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs