தென்காசி மாவட்டத்தில் 8 வட்டங்களில் காலியாக உள்ள 53 கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசி வட்டத்தில் 9 பேரும், கடையநல்லூர் வட்டத்தில் 10 பேரும், திருவேங்கடம் வட்டத்தில் 6 பேரும், சங்கரன்கோவில் வட்டத்தில் 5 பேரும், சிவகிரி வட்டத்தில் 3 பேரும் , செங்கோட்டை வட்டத்தில் 6 பேரும், வீரகேரளம்புத்தூர் வட்டத்தில் 6 பேரும், ஆலங்குளம் வட்டத்தில் 8 பேரும் கிராம உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. அரசு விதிகளுக்குட்பட்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்யப்படுவதற்குரியது. அரசின் தேவைக்கேற்ப நியமனம் செய்யப்பட்ட நபர் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
பணிநியமனம் செய்யப்பட்ட நபர்கள் அவரது பணிக்கிராமத்தில் குடியிருக்க வேண்டும் என்றும், பணிக்கிராமத்தில் உள்ள அரசு சொத்துக்கள். அரசு மரங்கள் அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு கட்டிடங்கள் ஆகியவைகளை பாதுகாப்பதுடன் சட்டம் ஒழுங்கு நிலை. தொற்று நோய் பரவுதலை கண்காணித்து மேல் நிலை அலுவலர்களுக்கு அவ்வபோது தெரிவிப்பது அவரது தலையாய் கடமை என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.
மேலும், அரசு உதவி மருத்துவ அலுவலர் நிலைக்கு குறையாத அலுவலரிடம் பெறப்பட்டட உடற் தகுதி சான்று, வேலைவாய்ப்பு அலுவலக அரல் பதிவு அட்டை ஆகியவற்றுடன் அந்தந்த வருவாய் வட்டாட்சியர் முன்பு ஆஜராகி பணிக்கிராமத்தில் பணியேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள: Village Assistant Recruitment Results
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.