ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ்நாட்டில் 1,028 செவிலியர் காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள் : கொரோனா காலத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு முன்னுரிமை

தமிழ்நாட்டில் 1,028 செவிலியர் காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள் : கொரோனா காலத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு முன்னுரிமை

காட்சிப்படம்

காட்சிப்படம்

TN Staff Nurse Recruitment : தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 1,028 செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கீழ் உள்ள 1,028+ செவிலியர் காலிப்பணியிடங்களைத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு ரூ.18,000 மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு இப்பணியிடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணியின் விவரங்கள்:

மாவட்டத்தின் பெயர்பணியிடம்
செங்கல்பட்டு45
கோயம்புத்தூர்119
கள்ளக்குறிச்சி54
காஞ்சிபுரம்-
மதுரை86
நாகப்பட்டினம்69
பெரம்பலூர்61
புதுக்கோட்டை114
சிவகங்கை41
தென்காசி10
தஞ்சாவூர்140
திருச்சி119
திருப்பத்தூர்31
திருப்பூர்126
விருதுநகர்13

வயது வரம்பு:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு அதிகபட்சம் 50 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் செவிலியர் பணியிடத்திற்கு வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

செவிலியர் பட்டப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc.,Nursing)/தமிழ் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum registered under TN nursing council)

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்குச் செவிலியர்கள் அந்தந்த மாவட்டங்களின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : TNPSC புதிய வேலைவாய்ப்பு : ரூ.71,000 வரை சம்பளம்... 761 காலிப்பணியிடங்கள்

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 

மாவட்டத்தில் பெயர்நாள்
செங்கல்பட்டு27.01.2023
கோயம்புத்தூர்30.01.2023
கள்ளக்குறிச்சி25.01.2023
மதுரை27.01.2023
நாகப்பட்டினம்20.01.2023
பெரம்பலூர்27.01.2023
புதுக்கோட்டை27.01.2023
சிவகங்கை27.01.2023
தென்காசி19.01.2023
தஞ்சாவூர்30.01.2023
திருச்சி31.01.2023
திருப்பத்தூர்25.01.2023
திருப்பூர்30.01.2023
விருதுநகர்25.01.2023

மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் இணையத்தளத்தில் பார்க்கவும்.

First published:

Tags: Nurses Recruitment, Tamil Nadu Government Jobs