தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக 2 வட்டார இயக்க மேலாளர் (Block Mission Manager) மற்றும் 16 வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் வரும் 15ம் தேதிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காலியிடங்கள் விவரம்:
வட்டார இயக்க மேலாளர் (Block Mission Manager) | காலியிடங்கள் - 2 |
வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) | ஆலங்குளம் -2கடையம் - 2கீழப்பாவர் - 2செங்கோட்டை - 3வாசுதேவநல்லூர் -2கடையநல்லூர் - 1மேலநீலதநல்லூர் - 1சங்கரன்கோவில் - 3 |
கல்வித் தகுதி | வட்டார இயக்க மேலாளர்கள்: ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். MS Office படிப்பில் குறைந்த பட்சம் ஆறுமாத கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது கணினி உபயோகம் குறித்த பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.வட்டார ஒருங்கிணைப்பாளர்: ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். MS Office படிப்பில் குறைந்த பட்சம் ஆறுமாத கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
வயது வரம்பு: | 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் |
முன் அனுபவம்: | வட்டார இயக்க மேலாளர்கள்: மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்வட்டார ஒருங்கிணைப்பாளர்: மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும |
இருப்பிடம் | வட்டார இயக்க மேலாளர்கள்: தென்காசி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்க வேண்டும்வட்டார ஒருங்கிணைப்பாளர்: சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்க வேண்டும் |
கடைசி தேதி | 15.02.2023 |
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்படும் தகுதியான நபர்கள் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவர். பணித்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக ஒப்பந்தகாலம் புதுபிக்கப்படும்.
இதையும் வாசிக்க: ஒரே நிறுவனத்தில் 480 நாட்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதை தான்!
இதற்கான விண்ணப்பப் படிவத்தை தென்காசி மாவட்ட ஆட்சியராக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி; தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், தென்காசி மாவட்டம் 627 811 ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.