முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / S.E.T.C அரசு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர் பணியிடங்கள்: சூப்பர் அறிவிப்பு வெளியானது

S.E.T.C அரசு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர் பணியிடங்கள்: சூப்பர் அறிவிப்பு வெளியானது

S.E.T.C வேலைவாய்ப்பு

S.E.T.C வேலைவாய்ப்பு

TNSTC S.E.T.C driver conductor recruitment 2023: மேலாண்மை இயக்குனர் தலைமையிலான தேர்வுக்குழு,வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ், மாநிலத்தில் நீண்ட தூர பயண சேவைகளை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (State Express Transport Corporation) வழங்கி வருகிறது. இதில், காலியாக உள்ள  685  ஓட்டுநர் உடன்  நடத்துனர் (Driver Cum Conductor) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (18 மாதங்கள் பூர்த்தியாகிருத்தல் வேண்டும்), நடத்துனர் உரிமம் (Conductor Licence) இருக்க வேண்டும். 

கூடுதல் தகுதி: St. john Ambulance Association-ஆல்  வழங்கப்பட்ட முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உயரம் குறைந்த பட்சம் 160 செ.மீ, எடை குறைந்தபட்சம் 50 கிலோ இருத்தல் வேண்டும். கண் திறன் குறைபாடு இருக்கக் கூடாது.

ஊதிய விகிதம்:  ரூ.17,500 முதல் ரூ. 56,200 வரை

தெரிவு முறை: மேலாண்மை இயக்குனர் தலைமையிலான தேர்வுக்குழு,வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 122 ஓட்டுநர் பணியிடங்கள்: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

முன்னுரிமை: (i) கல்வித் தகுதி, வயது, சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமம், ஓட்டுநர் தகுதித் திறன், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தகுதித் திறன் ; (ii) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதவி செய்தவர்கள் ஆகிய இரண்டின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs