இல்லம் தேடி கல்வி திட் டத்தை தொய்வின்றி செயல்படுத்தும் விதமாக, அரசுப் பள்ளிகலில் 400க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் (பொறுப்பு) க. இளம்பகவத், அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அனைத்து மாவட்டங்களி லும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டப் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட வட்டார அளவில் ஓர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே மாவட்ட, வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் பணிபுரியும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காதவாறு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக தற்காலிக ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளின் விவரம் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்பட வேண்டும். அந்த ஆசிரியர்களின் பணிக் காலம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையாகும்.
சம்மந்தப்பட்ட பள்ளியின் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் தகுதியுடவையவராக இருப்பின் அவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு, தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000 வீதம் மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும்.
அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி தாற்காலிக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை ஜனவரி 9ம் தேதிக்குள் முடிக்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: TNTET Paper II Exam : ஆசிரியர் தகுதி தேர்வு II-ம் தாள் தேர்வு தேதி அறிவிப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.