முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு இதுதான் காரணம் - டிஎன்பிஎஸ்சி விளக்கம்!?

குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு இதுதான் காரணம் - டிஎன்பிஎஸ்சி விளக்கம்!?

காட்சிப் படம்

காட்சிப் படம்

முதன்மை தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து இன்னும் சற்று நேரத்தில் TNPSC செயலாளர், தேர்வுக்கட்டுபாட்டுதுறை அலுவலர், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்  ஆலோசனையில் பங்கேற்கின்றனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே TNPSC குரூப் 2 , 2ஏ முதன்மை தேர்வு தேர்வில் ஏற்பட்ட குளறுபடிக்கான காரணம் என்று கூறப்படுகிறது. தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்கள் சரியா அடுக்கப்படாமல் விட்டதும், வினாத்தாள் அச்சடிக்க ஒப்பந்தம் எடுத்த நிறுவனம்தான் செய்ய வேண்டிய பணிகளை  அவுட்சோர்சிங் விட்டதும் குளறுபடி ஏற்பட காரணம் என முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது.

குரூப் 2,2ஏ முதன்மை தேர்வில் ஏற்ப்பட்ட குளறுபடி TNPSC இன்று  ஆலோசனை மேற்கொள்கிறது. தேர்வர்களுக்கு பதிவெண்ணுடன் ஒதுக்கப்பட வேண்டிய வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டு கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற முதன்மை தேர்வில் குளறுபடி குறித்து இன்று TNPSC செயலாளர், தேர்வுக்கட்டுபாட்டுதுறை அலுவலர், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்  ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.

இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வை ரத்து செய்து விட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் - சீமான் கோரிக்கை

தேர்வில் குளறுபடி நடந்தது எப்படி, குளறுபடிக்கு காரணமானவர்கள் யார், தகுதித்தாளில் மட்டுமே நேர மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிற்பகலில் நடந்த எழுத்துத் தேர்வில் சில மையங்களில் நேர மாற்றம் நடந்ததற்கு என்ன காரணம்? மறுத் தேர்வுக்கான அவசியம் உள்ளதா? தகுதித் தேர்வில் அனைவரும் தேர்ச்சி வழங்கலாமா? பிற்பகல் தேர்வுக்கு தாமதமான தேர்வர்களுக்கு என்ன செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்  நடத்தப்படும்  குரூப் 2ல் நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான முதன்மை தேர்வை 55,071 பேர் கடந்த சனிக்கிழமை அன்று நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: TNPSC