ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் : மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் இந்து அறநிலையத்துறையில் வேலை

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் : மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் இந்து அறநிலையத்துறையில் வேலை

காட்சிப் படம்

காட்சிப் படம்

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

Govt Jobs: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, வரும்  டிசம்பர் 19-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி,  வயது வரம்பு, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவைப் பற்றி இங்கு பாப்போம்.

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்சம்பளம்தகுதி
ஓட்டுநர்1ரூ.18,500-58600/-8 ஆம் வகுப்பு தேர்ச்சி, வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 1 ஆண்டு அனுபவம்.
தபேதார்1ரூ.15,900-50,400/-8 ஆம் வகுப்பு தேர்ச்சி
உதவி மின் பணியாளர்1ரூ.16,600-52,400/-எலக்ரிகல் /வயர்மேன் பிரிவில் ஐடிஐ படிப்பு.
வேதபாராணம்1ரூ.15,700-50,000/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
காவலர்2ரூ.15,900-50,400/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
உதவி சுயம்பாகம்2ரூ.10,000-31,500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
உதவி பரிச்சாரகம்1ரூ.10,000-31500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
சமையலர்1ரூ.10,000-31,500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையல் அனுபவம் வேண்டும்.
சமையல் உதவியாளர்1ரூ.6,900-21,500/-எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உணவு தாயார் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
துப்புரவாளர்1ரூ.4,200-12,900/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 19.12.2022. மாலை 05.45 மணி வரை. ( விண்ணப்பங்கள் அலுவலகத்திற்குச் சென்றிருக்க வேண்டும்)

இந்து சமய அறநிலையத்துறை பணியின் பொது நிபந்தனைகள்: 

தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் வாசிக்க: அரசு வேலை உங்கள் கனவா? - இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

விண்ணப்பப் படிவம்:  இதற்கான விண்ணப்பத்தை thiruvottiyurvadivudaiamman.hrce.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தபால் மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர் /செயல் அலுவலர். அருள்மிகு தியாகராஜகசுவாமி திருக்கோவில் திருவொற்றியூர், சென்னை - 19 ஆகும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs