முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 8ம் வகுப்பு போதும்: மாதம் ரூ.50,000 சம்பளத்தில் இந்து அறநிலையத்துறையில் வேலை

8ம் வகுப்பு போதும்: மாதம் ரூ.50,000 சம்பளத்தில் இந்து அறநிலையத்துறையில் வேலை

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தருமபுரி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் அலுவலகம் மற்றும் தனி வட்டாட்சியர் பணியிடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி,  வயது வரம்பு, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவைப் பற்றி இங்கு பாப்போம்.

இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு434/2022/அ1 நாள்.09.02.2023
பணியின் பெயர்அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்7
வயது வரம்புஆதிதிராவிட/ அருந்ததியினர் 18 -37 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினர் 18-34 வயதுக்குள்ளும், பொதுப் பிரிவினர் 18-32 வயத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி8ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்நிலை - 1 ரூ.15,700 - .50,000/-தளம் - 1

இந்து சமய அறநிலையத்துறை பணியின் பொது நிபந்தனைகள்: தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து  சமயத்தைச் சேர்நதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: வரும் மார்ச் மாதம் 11ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவம்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், விண்ணப்பப் படிவத்தை இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் (www.hrce.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்துடன், கல்விச் சான்று நகல், சாதி சான்றிதழ் நகல், குடும்ப அடையாள அட்டை நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், ஆதார் அடையாள அட்டை நகல், முன்னுரிமைக்கான சான்றின் நகல், இதர தகுதிகள் ஏதுமிருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து அனுப்ப அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி, உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, செங்குந்தர் திருமணம் மண்டப வளாகம், பென்னாகரம் ரோடு, குமாரசாமிப்பேட்டை, தருமபுரி மாவட்டம் 636 701 ஆகும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs