தருமபுரி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் அலுவலகம் மற்றும் தனி வட்டாட்சியர் பணியிடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்தது 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்தமாக 7 அலுவலக உதவியாளர் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 4 இடங்கள் பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிட/ அருந்ததியினர் 18 -37 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினர் 18-34 வயதுக்குள்ளும், பொதுப் பிரிவினர் 18-32 வாயத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் | |
சம்பள விகிதம் | நிலை - 1 ரூ.15,700 - .50,000/-தளம் - 1 | |
குறைந்தபட்ச கல்வித்தகுதி | 8ம் வகுப்பு தேர்ச்சி | காலிப்பணியிடங்கள் |
இட ஒதுக்கீடு (இன சுழற்சி பட்டியல் அடிப்படையில் ) | ஆதிதிராவிடர் (அருந்ததியினர் ஆதரவற்ற விதவை) முன்னுரிமை பெற்றவர் (SCADW)(Reserved) Priority* | 1 |
பொதுப் போட்டி (பெண்கள் ஆதரவற்ற விதவை) (GT-W-DW) | 1 | |
ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர் (SC) Priority* | ||
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் அறிவிக்கப்படாத வகுப்பினர் (இதர பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) பெண்கள் - - ஆதரவற்ற விதவை (MBC-W-DW) (NP) | 1 | |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இதர பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) பெண்கள் - - ஆதரவற்ற விதவை (BC-W-DW) (NP) | 1 | |
பொது பிரிவு - பொது (GL) (NP) | 1 | |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இதர பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) பொது - (BC-GL) (NP) | 1 | |
மொத்த காலிப்பணியிடங்கள் | 7 |
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், விண்ணப்பப் படிவத்தை இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் (www.hrce.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்துடன், கல்விச் சான்று நகல், சாதி சான்றிதழ் நகல், குடும்ப அடையாள அட்டை நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், ஆதார் அடையாள அட்டை நகல், முன்னுரிமைக்கான சான்றின் நகல், இதர தகுதிகள் ஏதுமிருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து அனுப்ப அனுப்ப வேண்டும்.
இதையும் வாசிக்க: IAS Exam Preparation: நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ் அதிகாரி! - அடிப்படை தகுதி முதல் தேர்வுமுறை வரை- முழு விபரம் இதோ!
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்களை அனுப்ப வேண்டிய முகவரி, உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, செங்குந்தர் திருமணம் மண்டப வளாகம், பென்னாகரம் ரோடு, குமாரசாமிப்பேட்டை, தருமபுரி மாவட்டம் 636 701 ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: HRNC, Tamil Nadu Government Jobs