சென்னையின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றான, மயிலை அருள்மிகு கபாலீசுவர் திருக்கோயிலில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான, விண்ணப்பங்கள் வரும் மார்ச் 23ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பதவி | காலியிட எண்ணிக்கை | தகுதி | சம்பளம் |
இளநிலை உதவியாளர் | 2 | 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும் | சம்பள நிலை: ரூ. 18,500 முதல் 58600 வரை ஆகும் |
தமிழ் புலவர் | 1 | ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது அதற்கு இணையான தமிழில் B.lit அல்லது B.A., அல்லது M.A., அல்லது M.Lit பட்டம் பெற்றிருக்க வேண்டும். திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருக்க வேண்டும் | சம்பள நிலை: ரூ. 18,500 முதல் 58,600 வரை ஆகும் |
தவில் | 1 | தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைக்கருவிகளை வாசிப்பதில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியதுடன், ஏதேனும் சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் நடத்தப்படும் தவில் பள்ளிகளில் மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் | சம்பள நிலை: ரூ. 18,500 முதல் 58,600 வரை ஆகும் |
பிளம்பர் | 1 | அரசால் அங்கீகரிக்கப்ட்ட நிறுவனங்களால் குழாய் தொழில்/குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் 5 ஆண்டுகள் அல்லது 2 ஆண்டுகள் தொழில் பழகுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் | சம்பள நிலை: ரூ. 18000 முதல் ரூ. 56900 வரை ஆகும் |
வேத பாராயணம் | 1 | தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.ஏதேனும் சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி பாடசாலையில் அல்லது வேத தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் படிப்பினை மேற் கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் | சம்பள நிலை ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை ஆகும் |
உதவி பரிச்சாரகர் | 1 | தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். கோயிலில் வழங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும் | சம்பள நிலை ரூ.10,000 முதல் 31,500 வரை ஆகும் |
விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 19- 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 20 காலியிடங்கள்.. பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கவும்..!
mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர், திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை- 4 ஆகும். விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Recruitment