ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 465 ஆசிரியர் காலியிடங்கள்: 20ம் தேதிக்குள் நிரப்ப உத்தரவு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 465 ஆசிரியர் காலியிடங்கள்: 20ம் தேதிக்குள் நிரப்ப உத்தரவு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் காலியாக இருக்கும் 465 ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை,  முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக  நிரப்பிட  ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அனுமதி அளித்துள்ளார்.

இதுகுறித்து,  ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் 19 முதுநிலை ஆசிரியர்கள், 80 பட்டதாரி ஆசிரியர்கள், 366 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 465 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, பள்ளி மேலாண்மை குழு வழியே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேரடியாகவோ, தபால் வழியிலோ உரிய கல்வி சான்றுகளுடன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அனுப்ப வேண்டும். பின்பு, பள்ளி மேலாண்மை குழு வழியே, தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த பணிகளை வரும் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

இதையும் வாசிக்க:  தமிழ்நாடு அரசுத் துறைகளில் 10,402 எஸ்சி/எஸ்டி காலிப்பணியிடங்கள்: 3 மாதங்களில் நிரப்ப அறிவுறுத்தல்

இடைநிலை ஆசிரியர்கள் பதவிக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Govt teachers