முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / போக்குவரத்து கழகங்களில் 800 டிரைவர், கண்டக்டர் காலியிடங்கள் : தமிழக அரசு அதிரடி உத்தரவு

போக்குவரத்து கழகங்களில் 800 டிரைவர், கண்டக்டர் காலியிடங்கள் : தமிழக அரசு அதிரடி உத்தரவு

காட்சிப் படம்

காட்சிப் படம்

122 ஓட்டுநர்  பணியிடங்களையும், 685 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (driver cum conductor)  பணியிடங்களையும் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

போக்குவரத்து துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (SETC) ஒப்புதல் அளிக்கப்பட இடங்களில் சுமார் 1484 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (driver cum conductor) பணியிடங்களும்,  போக்குவரத்து கழகம் கும்பகோணம் நிறுவனத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களில் 222 டிரவைர் பணியிடங்களும் நிரப்பப்படல் உள்ளன.

தற்போது, 122 ஓட்டுநர்  பணியிடங்களையும், 685 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (driver cum conductor)  பணியிடங்களையும் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.

இந்த பணியிடங்களை நிரப்பவுதற்கான அறிவிப்பு இரண்டு முன்னணி செய்தி தாளில் வெளியிடப்பட வேண்டும் என்றும், விண்ணப்பங்கள் இணைய வழியில் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு போக்குவரத்துக் கழகம்  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுதியான நபர்களின் பட்டியலை  பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 முன்னுரிமை:

a. கல்வித் தகுதி, வயது, சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமம், ஓட்டுநர் தகுதித் திறன்,     ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தகுதித் திறன்

b. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதவி செய்தவர்கள்

ஆகிய இரண்டின் அடிப்படையில்  முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

First published:

Tags: Tamil Nadu Government Jobs