ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - பெண்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - பெண்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

  காட்சிப் படம்

காட்சிப் படம்

தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்ளுக்கு அதற்கான அமைந்த படிவத்தில் புகைப்படத்துடன் 23.01.2023க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஆற்றுப்படுத்துநர் ( Counsellor) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடம் ஒரு வருட கால ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும், அதற்கான விண்ணப்பங்கள் தகுதியான பெண் நபர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

பதவியின் பெயர்: ஆற்றுப்படுத்துநர் (Counsellor)

எண்ணிக்கை : 1 (பெண்கள் மட்டும்)

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல்/உளவியல்/ பொது சுகாதாரம் ஆலோசனையில் பட்டதாரி

(அல்லது)

PG Diploma ஆற்றுப்படுத்துதல் மற்றும் தொடர்பாடல்

பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை போன்ற களத்தில் குறைந்தது 2 வருட அனுபவம்: அரசு/ அரசு சார்பற்ற நிறுவனம்

வயது  வரம்பு:  40க்குள்

தொகுப்பூதியம்:  ரூ.18,538 ஒரு மாதத்திற்கு

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள்  https://cuddalore.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்ளுக்கு அதற்கான அமைந்த படிவத்தில் புகைப்படத்துடன் 23.01.2023க்குள்   கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.312, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் - 607001.

முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs