முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத் துறையில் 281 பணியிடங்கள்!

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத் துறையில் 281 பணியிடங்கள்!

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி வேலைவாய்ப்பு அறிவிப்பு: 281 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கடைசி நாள்: 07.04.2023 ஆகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் மிக முக்கிய திருக்கோயில்களில் ஒன்றாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 281 பணியிடங்களுக்கு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அரசு வேலைவாய்ப்பு தேடி இளைஞர்கள் இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரங்கள்: 

வெளித்துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள்

தட்டச்சர்6
நூலகர்1
கூர்க்கா2
அலுவலக உதவியாளர்65
உபகோவில் பல வேலை26
சமையல் உதவியாளர்2
ஆயா பணி3
பூஜை காவல்10
காவல்9
பாத்திர சுத்தி50

மேற்காணும் பணியிடங்களில், பெரும்பாலான பதவிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும், தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்தால் போதுமானது.

அதேபோன்று, கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர் போன்ற தொழில்நுட்ப பிரிவின் கீழ் 82 காலிப்பணியிடங்களும்;  ஆசிரியை, ஆய்வக உதவியாளர் போன்ற ஆசிரியர் பிரிவின் கீழ் 19 காலியிடங்களும்; நாதல்ஸ்வரம், தவில் போன்ற உள்துறை பிரிவின் கீழ் 14 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்து அறநிலைத் துறை வெளியிட்ட தேர்வு அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள், அதனை பதிவிறக்கம் செய்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 07.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள்.

பொது நிபந்தனைகள்:

தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு முறையானது அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.

விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். செலுத்தி அலுவலக நேரத்தில் நேரில்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, "இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் -624 601" என்ற முகவரிக்கு நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs