ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தேர்வு இல்லை.... மதுரையில் 450 காலியிடங்கள் - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தேர்வு இல்லை.... மதுரையில் 450 காலியிடங்கள் - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

தகுதியான நபர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள  அனுமதிக்கப்படுவர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai |

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மதுரை மண்டலத்தில் அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைகிறது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் போதிய கால அளவு இருக்கும் போதே உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவியின் பெயர்காலி இடங்கள்சம்பளம்
பருவகால பட்டியல் எழுத்தர்150ரூ.5,285+ரூ.3,499/- T.A ரூ.120
பருவகால உதவுபவர்150ரூ.5,218+ரூ.3,499/- T.A ரூ.100
பருவகால காவலர் (ஆண்கள் மட்டும்)150ரூ.5,218+ரூ.3,499/- T.A ரூ.100

வயது வரம்பு: இப்பணிகளுக்கு எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு அதிகபட்சம் 37 வயது எம்.பி.சி/பி.சி பிரிவினருக்கு அதிகபட்சம் 34 மற்றும் ஓ.சி பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: பட்டியல் எழுத்தர் பணிக்கு இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; உதவுபவர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; காவலர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதியான நபர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள  அனுமதிக்கப்படுவர். 

நேர்காணல் நடைபெறும் நாள்:

பதவிமாவட்ட வேலைவாய்ப்பு பதிவு பட்டியல் தார்கள்பொது விளம்பர விண்ணப்பதார்கள்
பட்டியல் எழுத்தர்18.01.2023 காலை 10 மணி19.01.2023 காலை 10 மணி
உதவுபவர்கள்20.01.2023 காலை 10 மணி21.01.2023 காலை 10 மணி
காவலர்கள்23.01.2023 காலை 10 மணி24.01.2023 காலை 10 மணி

எனவே தகுதியுடைய நபர்கள்  விண்ணப்பத்துடன் சான்றிதழ்களை (கல்வி, சாதிச் சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) நகல்களுடன் நாளை  (10.01.2023 அன்று) மாலை 5 மணிக்குள் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், 10, குருவிக்காரன் சாலை, அண்ணாநகர், மதுரை - 20 என்ற அலுவலகத்திற்க்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs