தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் காலியாக கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை வரும் 16-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பபங்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே, தேர்வர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் போதிய கால இடைவெளி இருக்கும்போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள்: 3,167
குறைந்தபட்சம் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் உள்ளூர் மொழிப் பாடங்கள் எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும், கண்டிப்பாக மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவு கொண்டவராக இருக்க வேண்டும். வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டும் நபராகவும் இருக்க வேண்டும்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 16.03.2023 அன்று, 18- 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரையும், பட்டியல்/பழங்குடியின வகுப்பினர் 5 ஆண்டுகள் வரையும், மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரையும் தளர்வுகள் கோரலாம்.
எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல், விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். எனவே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்தது 80% மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் இதில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமுள்ளன.
தமிழ்நாட்டில் மண்டலம் வாரியான அறிவிக்கப்பட்ட காலியிடங்கள்:
விண்ணப்பம் செய்வது எப்படி? இப்பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முகப்புப் பக்கத்தில், Registration- ஐ கிளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண், இதர தொடர்பான விவரங்கள் மற்றும் தகவல்களை அளிக்க வேண்டும். இறுதியாக, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs