jobs மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை (SSC - ADVERTISEMENT NO. Phase-XI/2023/Selection Posts) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் உள்ள 549 வகைமைகளின் கீழ் 5,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், கிட்டத்தட்ட 100 வகைமைகள் பட்டப்படிப்பு (Graduation and Above) நிலையிலும், 169 வகைமைகள் (10+2 Higher Secondary )மேல்நிலைப்பள்ளி நிலையிலும், 280 வகைமைகள் மெட்ரிக் பள்ளி நிலையிலும் (Matriculation) நிரப்பப்பட உள்ளன.
இதற்கான விண்ணப்ப செயல்முறை நேற்று (06.03.2023) முதல் தொடங்கியது. இம்மாதம் 27ம் தேதி நள்ளிரவு 11 மணி வரை இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க முடியும். ssc.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: TNPSC Exam Postponed: டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதிகள் மாற்றம்: முக்கிய அறிவிப்பு வெளியானது
கணினி அடிப்படையில் நடைபெறும் தேர்வின் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பம் செய்வது எப்படி ஆகியவற்றை SSC விளம்பர அறிக்கையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs