எஸ்.எஸ்.சி தேர்வாணையம் (Staff Selection commission) அறிவித்துள்ள MTS (Multi-Tasking Examination, 2022 ) தேர்விற்கான விண்ணப்ப செயல்முறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப் பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
முன்னதாக, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள MTS (Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar Examination, 2022 ) பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வினை எஸ்எஸ்சி (Staff Selection commission) அறிவித்தது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை கடந்த மாதம் 18ம் தேதி முதல் பிப்ரவரி 16ம் தேதி வரை பெறப்பட்டது. இந்நிலையில், நேற்று கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பித்தாரர்கள் விண்ணப்பித்த காரணத்தினால் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக, இணையதளம் முற்றிலும் இயங்கவில்லை.
இந்நிலையில், இயங்காத இணையதளத்தை எஸ்எஸ்சி ஆணையம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும், விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், தேர்விற்கான கடைசி தேதியை எஸ்எஸ்சி தேர்வாணையம் நீட்டித்துள்ளது. இன்று (17ம் தேதி) வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, பிப்ரவரி 26ம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்காத தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் வாசிக்க: தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலை... மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!
இந்த பதவிக்கு, குறைந்தது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs