ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லை... ரயில்வே துறையில் 1,785 காலியிடங்கள்

எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லை... ரயில்வே துறையில் 1,785 காலியிடங்கள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெல்டர், பெயிண்டர், எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை தென் கிழக்கு ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. பணிக்கு எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.rrcser.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

காலியிடங்கள்: 1,785

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.01.2023 அன்று  14 முதல் 24 வருடங்களாக இருக்க வேண்டும் .

கல்வித் தகுதி:  10, +2 பாட முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி்.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில்(Trade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு முறை: 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 02-02-2023 ஆகும். முழுமையான அறிவிப்பை தென்கிழக்கு இந்திய ரயில்வே வாரியத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏன் அப்ரண்டிஸ் பணிகள் முக்கியத்துவம் பெறுகிறது:

இந்திய ரயில்வே குறிப்பிட்ட பிரிவுகளில் பழகுனர் சட்டத்துக்கு உட்பட்டு 1963 ஆகஸ்ட் முதல் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எந்தவித போட்டி அல்லது தேர்வு இன்றி பழகுனர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.

இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு ரயில்வே பயிற்சி மட்டுமே அளித்து வந்த போதிலும், ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் ( Level – 1 recruitment notification முந்தைய Gr. ‘D’ category posts (Grade Pay – Rs.1800/-)) 20 சதவீத இடங்களை அப்ரெண்டிஸ்களுக்காக இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்து வருகிறது. எனவே, ஆர்வமுள்ள தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


First published:

Tags: Indian Railways