Govt Jobs: தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் [South India Multi-State Agriculture Co-operative Society Ltd -SIMCO] இயங்கி வரும் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மருத்துவமனைகளில் பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்:
பதவி பெயர் | பணியிடங்கள் எண்ணிக்கை | கல்வி தகுதி | ஊதிய விகிதம் |
ஹோமியோபதி மருத்துவர் | 6 | BHMS | 15800 - 35500 |
ஆயுர்வேத மருத்துவர் | 6 | BHMS | 15800 - 35500 |
யுனானி மருத்துவர் | 1 | BHMS | 15800 - 35500 |
யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர் | 6 | BHMS | 15800 - 35500 |
வயது வரம்பு:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது வரம்பு 23 -35 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
விண்ணப்ப படிவங்களை www.simcoagri.com என்ற இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்படி பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச்சான்றிதழ். தொழில்நுட்பத்தகுதிச்சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய நகல்களில் சுயசான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர், SOUTH INDIA MULTHSTATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.[SIMCO] டவுன் ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர்- 632004. என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கவும். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 28.02.2023 மாலை 4.30 PM மணி வரை ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.