பொங்கல் பண்டிகை அன்று நடைபெறவுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளர்க் பணிக்கான தேர்வை, வேறு தேதிக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எழுத்தர் பணிநிலையில் உள்ள இளநிலை அசோசியட் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பாரத் ஸ்டேட் வங்கி வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் 5,008 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பதவிக்கான தேர்வு முறையானது, முதல் நிலைத்தேர்வு (Prelims), முதன்மைத் தேர்வு(Mains) என 2 முறைகளில் நடைபெற உள்ளது. முதல் நிலைத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முதன்மை தேர்வு வருகின்ற 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அன்றைய தினம் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே, பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணிக்கான முதன்மைத் தேர்வை வேறு தேதிக்கு மாற்றி அமைக்க தேர்வர்கள் கோரியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 355 ஆகும். இதில், 153 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 96 இடங்கள் ஓபிசி பிரிவினருக்கும், 35 இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கும், 67 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 4 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, SBI