முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / டிகிரி முடித்த பெண்களுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு

டிகிரி முடித்த பெண்களுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு

திருவண்ணாமலையில் பெண்களுக்கு வேலை

திருவண்ணாமலையில் பெண்களுக்கு வேலை

TN Job alert : திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செய்யார், அரசு மருத்துவமனை செங்கம் மற்றும் அரசு மருத்துவமனை ஆரணி ஆகிய மூன்று அலுவலர்களிலும் உள்ள RMNCH ஆலோசகர்கள் (பெண்கள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படவுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
RMNCH Counselor350ரூ.18,000/-

கல்வித்தகுதி:

Social work/ Public Administration / Psychoogy / Sociology / Home Sciene / Hospital and Health Management ஆகிய பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு தேவை மற்றும் 1-2 ஆண்டுகள் அனுபவம் தேவை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://tiruvannamalai.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதனைத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்குப் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

Also Read : ரூ.50000 வரை சம்பளம்.. சான்றிதழ் படிப்பு போதும்.. தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு..!

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்,

பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,

திருவண்ணாமலை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 24.02.2023 மாலை 5 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Tamil Nadu Government Jobs, Thiruvannamalai