சென்னை மாநகராட்சியில் பொதுச் சுகாதாரத்திற்குக் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 46 காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருத்துவம் படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடங்களுக்கு ரூ.90,000 சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் 11 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர். மேலும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Obstetrician /Gynaecologist | 11 | ரூ.90,000 |
Paediatrician | 9 | ரூ.90,000 |
General Surgeon | 13 | ரூ.90,000 |
Anaesthetist | 12 | ரூ.90,000 |
OrthopaedicSurgeon | 1 | ரூ.90,000 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Obstetrician /Gynaecologist | MBBS மற்றும் MD (Obstetrics and Gynaecology)/MBBS உடன் Obstetrics and Gynaecology பிரிவில் டிப்ளமோ |
Paediatrician | MBBS மற்றும் MD (Paediatrics)/MBBS உடன் ChildHealth பிரிவில் டிப்ளமோ |
General Surgeon | MBBS உடன் MS (General Surgery) |
Anaesthetist | MBBS உடன் MD(Anaesthesia)/முதுநிலை டிப்ளமோ |
OrthopaedicSurgeon | MBBS உடன் MS(Orthopaedic Surgery)/OrthopaedicSurgery பிரிவில் டிப்ளமோ |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடைய விண்ணப்பதார்கள் https://chennaicorporation.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து சுயவிவரங்கள் அடங்கிய படிவம், கல்வி சான்றிதழ் மற்றும் அனுபவ சான்றிதழ் போன்றவற்றுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று கொடுக்க வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : விண்ணப்பம்
Also Read : ஏதாவதொரு டிகிரி போதும்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையில் வேலை
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Member Secretary, Chennai City Urban
Health Mission, Public Health Department, Ripon Buildings, Chennai - 600003.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 22.02.2023 மாலை 5 மணி வரை.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Govt hospital, Jobs, Tamil Nadu Government Jobs