ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

நெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை

நெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை

மத்திய அரசு நிறுவனம்

மத்திய அரசு நிறுவனம்

Central Government job alert : டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள நெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

யுஜிசி நெட் டிசம்பர் 2022 தேர்வு மூலம் POWERGRID,CTUIL,Damodar Valley Corporation போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் HR Trainees ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். டிசம்பர் 2022 நெட் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறுபவர்கள் இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்று வேலையில் சேரலாம். ASSISTANT OFFICER TRAINEE (HR) / MANAGEMENT TRAINEE (HR) என்று இரண்டு பணிகளுக்குத் தேர்வு செய்யப்படவுள்ளார்.

பணியின் விவரங்கள்:

பதவிபணியிடம்நிறுவனம்
AOT (HR)27POWERGRID
AOT (HR)03CTUIL
MT (HR)5DVC

நெட் தேர்வு பாடங்கள்:

Labour Welfare/ Personnel Management/

Industrial Relations/ Labour & Social Welfare/ Human Resources Management பாடங்களில் நெட் தேர்ச்சி பெற வேண்டும். தாள் குறியீடு 55.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.12.2022 நாள் வரை வயது 28 ஆக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

MBA in HR மற்றும் Personnel Management &

Industrial Relations/ Social Work/ HRM and Labour Relations/ Labour and Social Welfare ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம்.

Also Read : UPSC வேலைவாய்ப்பு : பல்வேறு துறைகளில் தகுதிக்கேற்ற வேலை... உடனே விண்ணப்பியுங்கள்!

தேர்வு செய்யப்படும் முறை:

நெட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்தகட்டத்திற்கு விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்குக் குழு தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://www.powergrid.in/ என்ற இணையத்தளத்தில் 11.02.2023 ஆம் நாளில் இருந்து விண்ணப்பிக்கத் தொடங்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி தேதியாக 05.03.2023 உத்தேச அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Jobs, NET, UGC