முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தென்காசி மாவட்டத்தில் பெண்களுக்கு காத்திருக்கும் அரசு வேலைவாய்ப்பு.. இதோ விவரம்!

தென்காசி மாவட்டத்தில் பெண்களுக்கு காத்திருக்கும் அரசு வேலைவாய்ப்பு.. இதோ விவரம்!

காட்சிப்படம்

காட்சிப்படம்

TN job alert : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள 2 வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 16 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பட்டப்படிப்பு படித்த பெண்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
வட்டார இயக்க மேலாளர்2
வட்டார ஒருங்கிணைப்பாளர்ஆலங்குளம்-2கடையம்-2கீழ்ப்பாவூர்-2செங்கோட்டை-3வாசுதேவநல்லூர்-2கடையநல்லூர்-1மேலநீலிதநல்லூர்-1சங்கரன்கோவில்-3

வட்டார இயக்க மேலாளர்கள்(Block Mission Manager) பணி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office இல் குறைந்தபட்சம் 6 மாத காலம் கணினி படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியலில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் விண்ணப்பதார்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 3 வருட அனுபவம் தேவை.

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Co-ordinator)பணி:

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் MS Office இல் குறைந்தபட்சம் 3 மாத காலம் கணினி படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதார்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 2 வருட அனுபவம் தேவை.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் https://tenkasi.nic.in/ என்ற இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ள படி விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : 40,000 அஞ்சல்துறை காலியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி? – ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,

மாவட்ட ஆட்சியரகம்,

தென்காசி - 627 811.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15.02.2023

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Tamil Nadu Government Jobs, Tenkasi