தேசிய நலவாழ்வு குழுமத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட நலச் சங்கத்தின் மூலம் சுகாதார பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல் மருத்துவ உதவியாளர், சுகாதார இன்ஸ்பெக்டர் மற்றும் ரோடியோகிராப்பர் பணியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. மேலும் இப்பணியிடங்களுக்குத் தேவையான விவரங்கள் கீழ் வருமாறு:-
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Dental Assistant | 3 | ரூ.13,800/- |
Health Inspector | 3 | ரூ.14,000/- |
Radiographer | 2 | ரூ.13,300/- |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Dental Assistant | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Dental Technician Course முடித்திருக்க வேண்டும். |
Health Inspector | 12 ஆம் வகுப்பில் Biology/Botany and Zoology பாடங்களைக் கொண்டு தேர்ச்சி மற்றும் 10 ஆம் வகுப்பில் தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட அனுபவம் |
Radiographer | Radiography பாடத்தில் இளங்கலைப் பட்டம் |
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tiruvannamalai.nic.in/ என்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்களுடன் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : 40,000 அஞ்சல்துறை காலியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி? – ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
கெளரவ செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.02.2023 மாலை 5 மணி வரை.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.