முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / இன்றே விண்ணப்பியுங்கள்: உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பணிக்கு 550 காலியிடங்கள்

இன்றே விண்ணப்பியுங்கள்: உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பணிக்கு 550 காலியிடங்கள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் patnahighcourt.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்பதிவு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 7 ஆகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Patna, India

High Court Recruitment: பாட்னா உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 550 குரூப் 'பி'உதவியார் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளை மறுநாளுடன் (மார்ச் 7ம் தேதி) முடிவடைகிறது. இந்திய குடியுரிமையை பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் காலம் தாழ்த்தாமால் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்கவேண்டும். கணினி செயலி தொடர்பாக பட்டயம் அல்லது குறைந்தது 6 மாதம் காலம் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.01.2023 அன்று 37-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே பட்டியல் சாதிகள்/  பழங்குடி வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை உண்டு. இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு மூன்றாண்டு வயது வரம்பு சலுகை உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு (Prelims Examination), முதன்மைத் தேர்வு (Main Examination), Interview (நேர்காணல் தேர்வு), கணினி அறிவு தேர்வு ஆகிய நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வில்  கேள்விகள் Multiple Choice Questions தன்மையில் இருக்கும். முதன்மைத் தேர்வில் விரிவான வகையில் விடையளிக்க வேண்டும்.

சம்பள நிலை: இதற்கான சம்பள நிலை ரூ 44,900 முதல்  1,42,400 வரை 

விண்ணப்பக் கட்டணம்:  இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.1200ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.600 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் patnahighcourt.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்பதிவு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 7 ஆகும்.

First published:

Tags: Central Government Jobs