இந்திய நாடாளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் சேவையில் பணிபுரிய தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிகளுக்கான குறைந்தபட்ச தகுதிகளை இங்கே காணலாம்.
மொத்த காலியிடங்கள்: 10 (சம்பள நிலை: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை)
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகமொன்றிலிருந்து, குறைந்தது இளநிலை வரை இந்தியை கட்டாய/ விருப்ப மொழிப் பாடமாக எடுத்து படித்து, ஆங்கில பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
(அல்லது)
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகமொன்றிலிருந்து, குறைந்தது இளநிலை வரை ஆங்கிலத்தை கட்டாய/ விருப்ப மொழிப் பாடமாக எடுத்து படித்து, இந்தி பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 வயதை பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே பட்டியல் சாதிகள்/ பழங்குடி வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை உண்டு. இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு மூன்றாண்டு வயது வரம்பு சலுகை உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர். அரசு சேவையின் நிரந்தர அலுவலர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு உள்ளது.
தேர்வு முறை: இந்த பதவிகளுக்கான தேர்வு முறை 4 நிலைகளைக் கொண்டது. சொற்பொழிவு, எழுத்துத் தேர்வு, மொழிபெயர்ப்பு தேர்வு, நேர்காணல் தேர்வு ஆகிய நான்கு அடுக்குகளில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://loksabha.nic.in/ → Recruitment → Apply Online என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படம். வேலைவாய்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.