சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு 150 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OVERSEAS MANPOWER CORPORATION LIMITED) தெரிவித்துள்ளது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை இன்றுடன் (23.02.2022) நிறைவடைய இருக்கிறது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிட விவரம்:
பணி | செவிலியர் |
பணி இடம் | சவுதி அரேபியா |
காலியிடங்கள் | 150 |
பணி இடம் | சவுதி அரேபியா |
சம்பளம் | ரூ. 80,000 முதல் 1,00,000 வரை |
கல்வி தகுதி | B.Sc Nursing |
இதர சலுகைகள் | மேற்படி சம்பளம் சேர்க்காமல் உணவு, இருப்பிடம், விமான பயணச் சீட்டு, ஆண்டு விடுமுறை ஆகியவைகள் அந்நாட்டின் வேலை அளிப்பவரால் தனியாக வழங்கப்படும் |
நேர்காணல் தேதி | பெங்களூர் : பிப்ரவரி 26, 27,28 மற்றும் மார்ச் 01ம் தேதிகொச்சின் : பிப்ரவரி 27,28, மார்ச் 1,2,3டெல்லி: பிப்ரவரி 25,26சென்னை: 28 மற்றும் மார்ச் 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | நாளை (23.03.2023) |
இப்பணிக்கு, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ omcmanpower.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்:
அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் சுரண்டல்களிலிருந்து வேலைக்கு செல்பவர்களை பாதுகாக்கவும் மற்றும் குறைந்த செலவில் வெளிநாட்டு வேலைநாடுநர்களை வெளிநாடுகளில் பணியமர்த்துவதற்காகவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 1978-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிறுவனமாக தொடங்கப்பட்டு அரசு செயல்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Recruitment