மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை காவல் படை உதவி (Central Reserved Police Force) சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் (எழுத்துப்பணி) பதவிக்கான ஆட்தேர்வினை நடத்துகிறது.
இந்தியாவில் வசிக்கும் ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து நேற்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அறிவிக்கப்பட்ட காலியிடங்கள்:
உதவி சார்பு ஆய்வாளர்(சுருக்கெழுத்தர்) | 143 காலியிடங்கள் | சம்பளம்: ரூ.29200 முதல் ரூ.92300/- வரை |
தலைமைக் காவலர் (எழுத்தர்) | 1315 காலியிடங்கள் | சம்பளம்: ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை |
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 25/01/2023 ஆகும்
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு விண்ணப்பம் பெறும் கடைசி தேதி அதாவது 25/01/2023 அன்று 18 முதல் 25 வருடங்களாக இருக்க வேண்டும் அதாவது விண்ணப்பதாரர் 26/01/1998 தேதிக்கு முன்பு அல்லது 25/01/2005 தேதிக்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிலை (10+2) அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பம் கட்டாயம் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை https://crpf.gov.in/index.htm இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
விரிவான அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs