முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. திருவாரூர் ஊராட்சி வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. திருவாரூர் ஊராட்சி வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை

திருவாரூரில் அரசு வேலை

திருவாரூரில் அரசு வேலை

TN job alert : திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஒன்றிய தலைப்பில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
அலுவலக உதவியாளர்2ரூ.15,700-50,000

வயது வரம்பு:

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கக் குறைந்தது 18 வயது நிறைந்திருந்திருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு அதிகபட்சம் 34 வயது ஆக உள்ளது. ஆதிதிராவிடர் பிரிவினருக்கு அதிகபட்சம் 37 வயதாக உள்ளது.

கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tiruvarur.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து உரியச் சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ரூ.62,000 சம்பளம் வரை சம்பளம்... செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் டிரைவர் வேலை

தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 10.03.2023 மாலை 5.45 மணிக்குள் சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதார்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Tamil Nadu Government Jobs, Tiruvarur