ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கல்லூரி ஆசிரியர்கள் தேர்வு முறையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடையாது - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

கல்லூரி ஆசிரியர்கள் தேர்வு முறையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடையாது - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் போட்டி தேர்வை எதிர்கொண்டு தேர்ச்சி பெறும்போது, அவர்களுக்கு முன்னுரிமை அதாவது வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மாறாக வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது என்ற தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது. இதனால் கல்லூரிகளில் ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கணினி வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளது போல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது எனவும், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன்பு பல்கலைக்கழக பணியிடங்கள், அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், இப்போது புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள இருக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்ய தரமான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பாடத்திட்டங்களை ஐ.ஐ.டி., புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் நிபுணர்களால் 3 முதல் 6 மாதத்திற்குள் வடிவமைக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள், நிரந்தரப் பணிக்காக நடைபெற உள்ள போட்டி தேர்வை எழுத வேண்டும் என்றும், அதில் தேர்வு பெறும் போது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது எந்தவிதமான முன்னுரிமையும் தரப்படாது என்றும், போட்டி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனங்கள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் புதிய அறிவிப்பால் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs