முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ரூ.50,000 வரை சம்பளம்... நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் இரவு காவலர் பணி

ரூ.50,000 வரை சம்பளம்... நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் இரவு காவலர் பணி

இரவு காவலர் பணி

இரவு காவலர் பணி

TN job Alert : நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள இரவு காவலர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் கீழ் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்குத் தகுந்த ஆதிதிராவிடர் (அருந்ததியர்) (ஆதரவற்ற விதவை) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்வயது
இரவு காவலர்1ரூ.15,700 - 50,00037

கல்வித்தகுதி:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

Also Read :சிறுபான்மையினருக்கு லட்சக் கணக்கில் அரசின் கடன் உதவி - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர் https://nilgiris.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தாபல் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://nilgiris.nic.in/notice_category/recruitment/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.02.2023 மாலை 05.45 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Tamil Nadu Government Jobs, The Nilgris