மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய இளையோர் படை (National Youth Corps - NYC) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 18 முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலராக விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு, மாதம் ரூ. 5000 மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய இளையோர் படையில் சேர் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அம்மாவட்ட தேசிய இளையோர் அலுவலர் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஏப்ரல் 1 2023 அன்று, 18 முதல் 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: 8-ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: கும்பகோணம் அரசு கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை
தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வலர்கள், மக்களின் ஆரோக்கியம், எழுத்தறிவு, சுகாதாரம், மற்றும் இதர சமூகப் பிரச்சனைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அவசர காலங்களில் மத்திய/மாநில அரசு நிர்வாகங்களுக்கு துணை புரிதல், திட்டங்களை செயல்படுத்த உதவி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் காலம் 2 ஆண்டுகள் ஆகும். மாதம் ரூ. 5000/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நேரு இளைஞர் மைய அமைப்பு (Nehru Yuva Kendra Sangathan -NYKS) https://nyks.nic.in/NationalCorps/nyc.html இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர நிபந்தனைகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. (அல்லது) நாகப்பட்டினம் மாவட்ட அலுவலகத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 09.03.2023 ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs