முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்

அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்

கடலூரில் அரசு வேலை

கடலூரில் அரசு வேலை

TN job alert : கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்படும் நகர ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 25.02.2023 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
மருத்துவ அலுவலர்650ரூ.60,000
செவிலியர்650ரூ.18,000
பல்நோக்கு சுகாதார மேறபார்மையாளர்650ரூ.14,000
அடிப்படை பணியாளர்கள்650ரூ.8,500
தரவு உள்ளீட்டாளர்135ரூ.13,500
வட்டார தரவு உள்ளீட்டாளர்135ரூ.13,500
பல் மருத்துவ உதவியாளர்கள்435ரூ.10,475
மாவட்ட தர ஆலோசகர்145ரூ.40,000
நகர சுகாதார மேலாளர்345ரூ.25,000

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
மருத்துவ அலுவலர்MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்
செவிலியர்GNM டிப்ளமோ அல்லது /B.SC Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல்நோக்கு சுகாதார மேறபார்மையாளர்2 வருட Multipurpose Health Inspector Training பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அடிப்படை பணியாளர்கள்8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தரவு உள்ளீட்டாளர்கணிதத்தில் இளங்கலைப் பட்டம் / computer applications பாடத்தில் 1 வருட டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பெற்றிருக்க வேண்டும்.
வட்டார தரவு உள்ளீட்டாளர்கணிதத்தில் இளங்கலைப் பட்டம் / computer applications பாடத்தில் 1 வருட டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பெற்றிருக்க வேண்டும்.
பல் மருத்துவ உதவியாளர்கள்12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Dental Hygiene/DentalMechanic பட்டயப்பயிற்சி
மாவட்ட தர ஆலோசகர்பல் மருத்துவர் / ஆயுஷ் / செவிலியர் / சமூக அறிவியல் / வாழ்வியல் பிரிவுகளில் முதுகலைப் பட்டம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம்
நகர சுகாதார மேலாளர்B.Sc., Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://cuddalore.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப்படிவத்துடன் பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் நகல், இருப்பிடச் சான்று, சாதிச்சான்று மற்றும் கொரோனா காலத்தில் பணிபுரிந்ததிற்கான சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

Also Read : 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை.. சிவகங்கையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்,

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

05, பீச் ரோடு, கடலூர் 607 001.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 25.02.2023 மாலை 5 மணி வரை

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Govt hospitals, Jobs, Tamil Nadu Government Jobs