Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மயிலாடுதுறை மாவட்டத்தில் 91 அரசு செவிலியர் பணியிடங்கள் : விண்ணப்பிக்க ஜன.27-ம் தேதியே கடைசி நாள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 91 அரசு செவிலியர் பணியிடங்கள் : விண்ணப்பிக்க ஜன.27-ம் தேதியே கடைசி நாள்!

செவிலியர் பணி

செவிலியர் பணி

Mayiladuthurai nurse recruitment : மாயிலாடுதுறை மாவட்டத்தில் 91 செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள செவிலியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 91 செவிலியர் மற்றும் 12 இடைநிலை சுகாதாரப் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் மூலமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதார்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
செவிலியர்91
இடைநிலை சுகாதார வழங்குபவர்12

கல்வித்தகுதி:

செவிலியர் பட்டப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc.,Nursing)/ தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum registered under TN nursing council)

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் உள்ளவர்கள் https://mayiladuthurai.nic.in/என்ற மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : 22 மாவட்டங்களில் 1743 செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு... தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகல் அலுவலகம்

5 ஆம் நம்பர் புதுத்தெரு நல்லத்துக்குடி மெயின்ரோடு, மயிலாடுதுறை - 609001.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 27.01.2023 மாலை 5 மணி

அறிவிப்பைக் காண : மயிலாடுதுறை மாவட்ட செவிலியர் பணி அறிவிப்பு

First published:

Tags: Mayiladuthurai, Nurse job, Tamil Nadu Government Jobs