ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மதுரை மாவட்ட சுகாதார நிலையங்களில் 88 காலி பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

மதுரை மாவட்ட சுகாதார நிலையங்களில் 88 காலி பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

செவிலியர் பணி

செவிலியர் பணி

madurai nurse recruitment : மதுரை மாவட்டத்தில் 86 செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள செவிலியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 86 செவிலியர் மற்றும் 2 இடைநிலை சுகாதாரப் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் மூலமாக நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

விண்ணப்பதார்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
செவிலியர்86
இடைநிலை சுகாதார வழங்குநர்2

கல்வித்தகுதி:

செவிலியர் பட்டப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc.,Nursing)/தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum registered under TN nursing council)

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் உள்ளவர்கள் https://madurai.nic.in/ என்ற மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : 22 மாவட்டங்களில் 1743 செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு... தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம்,

விசுவநாதபுரம், மதுரை மாவட்டம் - 625 014.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 27.01.2023 மாலை 5 மணி

அறிவிப்பைக் காண : மதுரை மாவட்ட செவிலியர் பணி அறிவிப்பு

First published:

Tags: Madurai, Nurse job, Tamil Nadu Government Jobs