மதுரை இராசாசி மருத்துவமனையில் சிறப்பு பச்சிளம் குழந்தை (SNCU) பிரிவிற்காக காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்கள், தேசிய நலக் குழுமத்தின் (National Health Mission) கீழ் தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், விருப்பமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம்: (தேசிய நல குழுமம் – தற்காலிக பணி வாய்ப்பு/ National Health Mission - Temporary Vacancy)
ஒரு நபர் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்: கீழ்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த காலியிடங்கள் நிரப்பப்படும்.
முதவாதாக, இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
இரண்டாவதாக, பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர்,
அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை- 20,
பிரிவு பொது - 8 (G8) ஆகும்.
விண்ணப்பங்கள் நேரிலோ/ தபால் மூலமாகவோ அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.