முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய டிஎன்பிஎஸ்சி பணிகள்... முழு விபரம் இதோ!

பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய டிஎன்பிஎஸ்சி பணிகள்... முழு விபரம் இதோ!

டிஎன்பிஎஸ்சி தேர்வு

டிஎன்பிஎஸ்சி தேர்வு

தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் (HEALTH OFFICER) பதவிக்கான கணினி வழித்தேர்வு வரும் 13ம் தேதி நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய டிஎன்பிஎஸ்சி அரசுப் பணிகள் குறித்தும், இம்மாதத்தில் டிஎன்பிஎஸ்சி ஆணையம் திட்டமிட்டுள்ள தேர்வுகள் குறித்தும் இங்கே காணலாம்.

1.  TNPSC Road Inspector : 761 சாலை ஆய்வாளர் காலியிடங்கள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள 761 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த 13ம் தேதி வெளியிட்டது. குறைந்தது ஐடிஐ (கட்டுமான வரைதொழில் அலுவலர்) சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இம்மாதம், 11ம் தேதி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாளாகும்.

செய்தியை வாசிக்கடிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு : தமிழ்நாடு ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் காலியிடங்கள்

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

2. TNPSC  AGRICULTURAL OFFICER (EXTENSION), ASSISTANT DIRECTOR OF AGRICULTURE (EXTENSION) & HORTICULTURAL OFFICER

வேளாண்மை அலுவலர், வேளாண்மை திட்ட இயக்குனர், தோட்டக்கலை அலுவலர் ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி  கடந்த ஜனவரி 12ம் தேதி வெளியிட்டது. இம்மாதம், 10ம் தேதி வரை விண்ணப்பபங்கள் சமர்ப்பிப்பிக்கலாம். கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப செயல்முறை தொடர்பான விவரங்களை இந்த இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. TNPSC TOURIST OFFICER

தமிழ்நாடு பொதுப் பணியில் சுற்றுலா அலுவலர் பதவிக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த 25ம் தேதி வெளியிட்டது.  இம்மாதம் 23ம் தேதி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்த இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

4. COMBINED LIBRARY EXAMINATION 

ஒருங்கிணைந்த நூலக பணிகள்/ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுளளது. மார்ச் 1ம் தேதி வரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  ஆட்சேர்ப்பின் மூலம் 35 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு திட்டம், விண்ணப்பம் செய்வது எப்படி, மாத சம்பளம் தொடர்பான விவரங்கள் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே, மேற்கூறிய பதவிகளுக்கு உரிய கல்வி  மற்றும் இதர தகுதிகளை உடைய தேர்வர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பிப்ரவரி மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி  தேர்வுகள்: 

மீன்துறை சார் ஆய்வாளர் (SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT) பதவிக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு வரும் 8ம் தேதி நடை பெறுகிறது.  முற்பகல் தாள்- Iம், பிற்பகல் தாள்- IIம் நடைபெறும்.

மீன்துறை ஆய்வாளர் (INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT) பதவிக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு வரும் 7ம் தேதி நடை பெறுகிறது.  முற்பகல் தாள்- Iம், பிற்பகல் தாள்- IIம் நடைபெறும்.

தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் (HEALTH OFFICER) பதவிக்கான கணினி வழித்தேர்வு வரும் 13ம் தேதி  நடைபெறுகிறது.  

எனவே, மேற்கண்ட தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

First published:

Tags: TNPSC