எல்ஐசி நிறுவனம் அறிவித்த 300 உதவி நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer) பணியிடத்திற்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைகிறது. எனவே, இளைஞர்கள் காலம் தாழ்த்தாமல் போதிய கால அவகாசம் இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அறிவிக்கை | Recruitment of Assistant Administrative Officer (Generalist)- 2023 |
காலியிடங்கள் | 300 |
கல்வித் தகுதி | பி.ஏ/ பி.எஸ்சி /பிகாம் போன்ற இளநிலைப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் |
வயது வரம்பு | வயது வரம்பு 01/01/2023 அன்று 21 முதல் 30 வருடங்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர் 02/01/1993 தேதிக்கு முன்பு அல்லது 01/01/2002 தேதிக்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் |
அடிப்படை சம்பளம் | ரூ, 53,600 |
தேர்வு முறை: தேர்வு முறை மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வில் (Preliminary Examination) தகுதி பெற்ற தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.
முதல்நிலைத் தேர்வு திட்டம் :
முதல்நிலைத் தேர்வில், பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Reasoning ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து 70 கேள்விகள் கேட்கப்படும்.
முதன்மைத் தேர்வு திட்டம்:
முதன்மைத் தேர்வு, பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), தரவு பகுப்பாய்வு (Data Reasoning and Interpretation), காப்பீட்டு மற்றும் நிதி சந்தை பற்றிய புரிதல் (Insurance and Financial Market Awareness) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது.
இதையும் வாசிக்க: சென்னையில் இலவச மேக்-அப் பயிற்சி... 100% வேலைவாய்ப்பு உறுதி... உடனே விண்ணப்பியுங்கள்
விண்ணப்பம் செய்வது எப்படி: நாளைக்குள் (31-01-2023) விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணைய தள முகவரி licindia.in ஆகும். முகப்பு பக்கத்தில், (ஆட்தேர்வு (careers) > Recruitment of AAO(Generalist) 2023 என்ற இணைப்பு வழியே) விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள், அணைத்து பிரிவுகளையும் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs