கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் (Government College Of Fine Arts-Kumbakonam) காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் (Office Assistant) காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தது 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | அலுவலக உதவியாளர் (Office Assistant) |
காலியிடம் | 2 |
சம்பள விகிதம் | Level - 1 (15,700 முதல் ரூ.50,000 வரை ) |
வயது | 1.07. 2022 அன்றைய நிலவரப்படி, 18 - 37 வயதுக்குள் இருக்க வேண்டும் |
கல்வித் தகுதி | 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
இட ஒதுக்கீடு மற்றும் இன சுழற்சி | அருந்ததியினர் (Desititute Widow), பொதுப்பிரிவு ஆதரவற்றோர் |
வேலைவாய்ப்பு அறிவிக்க எண் | 644/அ2/2022 |
இந்த பதவிக்கான விண்ணப்பப் படிவத்தை, தஞ்சாவூர் மாவட்ட https://thanjavur.nic.in/ இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய முகவரி, முதல்வர், அரசு கவின்கலைக் கல்லூரி, மேலக்கொட்டையூர், சுவாமிமலை மெயின்ரோடு, மேலக்காவேரி போஸ்ட், கும்பகோணம், தஞ்சாவூர் - 612002 ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.