கரூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணியில் காலியாகவுள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பதவிகளுக்கு முற்றிலும் தற்காலிகமாக பணி நியமனம் (பணி நிரந்தரம் ஒருபொழுதும் செய்யபடமாட்டாது) செய்யும் பொருட்டு தகுதி தேர்வு நடைபெறவுள்ளது.
இனச்சுழற்சி அடிப்படையில் தகுதி உடையவர்களிமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் உரிய சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களை சுய சான்றொப்பத்துடன் (Self Attestation) இணைத்து பதிவு தபால் (ஒப்புகை அட்டையுடன்) மூலம் அனுப்பவேண்டும். சான்றிதழ்கள் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி தேர்வுக்கு இந்நீதிமன்ற இணையதள வலைதளத்தின் மூலம் அழைக்கப்படுவோர் மட்டும் நேரில் கலந்து கொள்ளவும்.
அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு :- ( 01.07.2022 அன்று)
விண்ணப்பதாரர்களின் இன சுழற்சி வகைகள் |
குறைந்தபட்ச வயது |
அதிகபட்ச வயது |
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் |
18 வயது (பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்) |
37 வயதுக்குள் |
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட |
18 வயது (பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்) |
34 வயதுக்குள் |
ஏனையோர் (அதாவது ஆ.தி, ஆ.தி(அ), ப.வ., மிபிவ, சீ.ம., பி.வ மற்றும் பி.வ.(முஸ்லீம்) ஆகிய வகுப்பினை சாராதவர்கள்) |
18 வயது (பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்) |
32 வயதுக்குள் |
(வயது வரம்பு சலுகைகள் நடைமுறையிலுள்ள அரசாணைகள், அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.)
பதவியின் பெயர்:- சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III - காலிப்பணியிடங்கள் - 8 (தற்காலிக அடிப்படையில்)
1. சம்பள ஏற்ற முறை : நிலை 10 ரூ.20,600 - 65,500
2. கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி (S.S.L.C. Passed)
3. தொழில்நுட்பக் கல்வித் தகுதி :
தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் முதுநிலை (அல்லது) தமிழ் தட்டச்சு தேர்வில் முதுநிலை மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் இளநிலை (அல்லது) தமிழ் தட்டச்சு தேர்வில் இளநிலை மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் முதுநிலை மற்றும்
தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் முதுநிலை (அல்லது) தமிழ் சுருக்கெழுத்து தேர்வில் முதுநிலை மற்றும் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் இளநிலை (அல்லது) 3) தமிழ் சுருக்கெழுத்து தேர்வில் இளநிலை மற்றும் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் முதுநிலை
காலியிட பகிர்வு (இன சுழற்சி முறை) (12 13 19 20 21 22 23 24):
- ஆதிதிராவிடர் (பெண்கள்) (ஆதரவற்ற விதவை) (முன்னுரிமையற்றவர்கள்)
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - (முன்னுரிமையற்றவர்கள்)
- பொது (பெண்கள்) (தமிழ் வழி கல்வி பயின்றவர்கள்) - (முன்னுரிமையற்றவர்கள்)
- பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர). - (முன்னுரிமையுள்ளவர்கள் - கொரோனா தொற்றினாலோ, இதர காரணங்களாலோ பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் (மகன்/மகள்))
- பொது (முன்னுரிமையுள்ளவர்கள் - முதல் தலைமுறை பட்டதாரிகள்)
- ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்)
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (பெண்கள்) - (தமிழ் வழி கல்வி பயின்றவர்கள்) (முன்னுரிமையற்றவர்கள்)
- பிற்படுத்தப்பட்டோர் (முன்னுரிமையற்றவர்கள்)
விண்ணப்பங்கள் (ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு சுயசான்றொப்பத்துடன்) தற்போது பணிபுரியும் விவரங்களுடனும் (ஏதும் இருப்பின்) அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும் கலப்புத் திருமணம் மற்றும் பிற) மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்கள் உரிய சுய சான்றொப்பத்துடனும் கீழ்காணும் முகவரிக்கு ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத் தபாலில் 30.06.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
மாவட்ட நீதிபதி, மாவட்ட நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தாந்தோன்றிமலை, கரூர் 639 007
மேற்குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாள், நேரத்திற்கு மேல் காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி இரத்து செய்யவோ மாவட்ட நீதிபதி, கரூர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. இத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரையை தவறாது படித்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சொல்லப்பட்டுள்ள அறிவுரைகள் பின்பற்றப்படாமல் இருக்கும்பட்சத்தில், பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கு உள்ளாக்கப்படும்.
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள
https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%20No.1-2022%20for%20the%20post%20of%20Steno%20Typist%20Grade%20III%20Tamil_1.pdf
இந்த லிங்கை க்ளிக் செய்யவும். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.