முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / நேர்காணல் மட்டுமே... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 காலியிடங்கள் அறிவிப்பு

நேர்காணல் மட்டுமே... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 காலியிடங்கள் அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

விண்ணப்பதாரர்கள் அனைத்து கல்விச்சான்றிதழ் நகல்களுடன் பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kalladaikurichi |

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கள்ளக்குறிச்சி  மண்டலத்தில், 2022-23 காரீப் பருவ கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் ஆகிய காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள்: 

பதவியின் பெயர்காலி இடங்கள்சம்பளம்கல்வித் தகுதி
பருவகால பட்டியல் எழுத்தர் (ஆண்/பெண்)20ரூ.5,285+ரூ.3,499/- (அகவிலைப்படி)  பணிநாள் ஒன்றுக்கு  போக்குவரத்துப்படி ரூ.120இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பருவகால உதவுபவர் (ஆண்/பெண் )40ரூ.5,218+ரூ.3,499/- (அகவிலைப்படி) பணிநாள் ஒன்றுக்கு போக்குவரத்துப் படி ரூ.10012 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பருவகால காவலர் (ஆண்கள் மட்டும்)150ரூ.5,218+ரூ.3,499/-(அகவிலைப்படி) பணிநாள் ஒன்றுக்கு போக்குவரத்துப் படி ரூ.1008 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மேற்காணும் தகுதியுடைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து கல்விச்சான்றிதழ் நகல்களுடன் பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே 07.02.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் மண்டல அலுவலகத்தில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இதையும் வாசிக்க: 40,000 கிளை போஸ்ட் மாஸ்டர் காலியிடங்கள்: 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. மிஸ் பண்ணாதீங்க

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், சேலம் தேசிய நெடுஞ்சாலை, மாடூர், சுங்கச்சாவடி அருகில், கள்ளக்குறிச்சி-606202 ஆகும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs