ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 11,705 காலியிடங்கள் அறிவிப்பு உண்மையா? எச்சரிக்கை கொடுத்த BSNL!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 11,705 காலியிடங்கள் அறிவிப்பு உண்மையா? எச்சரிக்கை கொடுத்த BSNL!

BSNL வேலைவாய்ப்பு

BSNL வேலைவாய்ப்பு

BSNL Fake JTO recruitment 2023: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தொலைத்தொடர்பு சார்ந்த படிப்புகளில்  பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் அரசு தொலைதொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை தொலைதொடர்பு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த பதவிக்கு, தொலைத்தொடர்பு சார்ந்த படிப்புகளில்  பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும், 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது போலியான வேலைவாய்ப்பு அறிவிக்கை என்று பிஎஸ்என்எல் நிர்வாகம் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், "2023 JTO recruitment தொடர்பாக செய்தி போலியானது. பிஎஸ்என்எல் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் https://bsnl.co.in என்ற  அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் மட்டுமே வெளியிடப்படும். போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறித்து பொது மக்கள்  கவனமாக இருக்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட்மேன், மெயில் கார்டு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியானதாகவும்,இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் செய்திகள் தகவல் வெளியாகியது. ஆனால், இது ஆட்சேர்ப்பு அறிவிப்பு இல்லை என்பதும், ஆட்சேர்ப்பிற்கான வரைவு விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பபாக   மட்டுமே இருந்தது.

அதன்பிறகு, இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையில், கிட்டத்தட்ட 10,000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு வெளியாகியுள்ளதாக தகவல்கள் பரவியது.  ஆனால், இதுவும் போலியான வேலைவாய்ப்பு அறிவிப்பாக மட்டுமே இருந்தது.

எனவே, வேலை தேடும் இளைஞர்கள், போலி அறிவிப்புகளை நம்பாமல் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள அந்தந்த அரசு  நிறுவனங்களின்   அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஒருமுறை பார்த்து கொள்ள வேண்டும்.

First published:

Tags: Central Government Jobs