முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / உலக புகழ்பெற்ற அம்மன் கோயிலில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

உலக புகழ்பெற்ற அம்மன் கோயிலில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அன்னதான திட்டத்தில் உள்ளத் துப்பரவு பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்தபட்சம் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்கள் இந்த பணிக்கு  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 17.03.2023 மாலை 5 மணி வரை ஆகும்.

விண்ணப்பப் படிவம்

இதற்கான, சம்பள நிலை ரூ.10,000 முதல் 31,500 வரை ஆகும்.  விண்ணப்பதார்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.  தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

நிபந்தனைகள்: 

1. விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயது நிறைவடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

3. விண்ணப்பப்படிவத்தை நேரடியாக சென்று அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது irukkangudimariamman.hrce.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்

4.. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கண்குடி சாத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம்-626202. தாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன் அதற்கு நிர்வாகம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

4. விண்ணப்பதாரர் வசிக்கும் எல்கைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை எதுமில்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.


First published:

Tags: Tamil Nadu Government Jobs