முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ரூ.30,000 வரை சம்பளம்.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வேலை..

ரூ.30,000 வரை சம்பளம்.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வேலை..

இருக்கண்குடி மாரியம்மன் கோவில்

இருக்கண்குடி மாரியம்மன் கோவில்

hindu religious department jobs : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அன்னதான திட்டத்தில் உள்ளத் துப்பரவு பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடத்திற்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு ரூ.10,000 முதல் 31,500 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதார்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
துப்பரவு பணியாளர்118-45ரூ.10,000-31,500

கல்வித்தகுதி:

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது https://irukkangudimariamman.hrce.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்குரிய சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

Also Read : ரயில்வே துறையில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சர் தகவல்!

தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,

இருக்கண்குடி, சாத்தூர் வட்டம்,

விருதுநகர் மாவட்டம் - 626202.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 17.03.2023 மாலை 5 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Hindu Endorsements Dept, Jobs, Tamil Nadu Government Jobs, Virudunagar