ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி.. ரூ.2.1 லட்சம் வரை சம்பளம்..

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி.. ரூ.2.1 லட்சம் வரை சம்பளம்..

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

Indira Gandhi National Open University Recruitment : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள உதவி பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

13 பிரிவுகளில் பல்வேறு துறைகளுக்கான 59 பணியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. இப்பணிகளுக்கு ரூ.57,700 - 2,18,200 வரை சம்பளம் வழங்கப்படும்.

பணியின் விவரங்கள்:

உதவி பேராசிரியர்

துறைபணியிடம்
Library Science1
Political Science1
Psychology1
Chemistry1
Geology1
Life Sciences2
Education1
Rural Development2
Management1
Health Science1
Food Science Technology1
InterDisciplinary & TransDisciplinary Studies2
Translation Studies and Training1

இணைப் பேராசிரியர்

துறைபணியிடம்
English1
Urdu1
Anthropology1
History1
Political Science1
Biochemistry1
Mathematics1
Child Development1
Nutritional Science2
Home Science1
Management1
Health Science1
Nursing1
Computer & Information Sciences1
Tourism and Hospitality Service1
InterDisciplinary & TransDisciplinary Studies1
Foreign languages2

பேராசிரியர்

துறைபணியிடம்
English1
Urdu1
Anthropology1
History1
Psychology1
Public Administration1
Sociology1
Biochemistry1
Chemistry1
Mathematics1
Statistics1
Education1
Child Development1
Home Science1
Nutritional Science1
Commerce1
Management3
Health Science1
Nursing1
Tourism and Hospitality Service1
Environment Studies1
Foreign languages1

கல்வித்தகுதி:

துறை சார்ந்த பாடத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் நெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும். இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிகளுக்கு துறைக்கு ஏற்ற அனுபவம் தேவை.

சம்பளம்:

உதவி பேராசிரியர் பணிக்கு ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை வழங்கப்படும். இணைப் பேராசிரியர் பணிக்கு ரூ.1,31,400 முதல் ரூ.2,17,100 வரை வழங்கப்படும். பேராசிரியர் பணிக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை வழங்கப்படும்.

Also Read : தேர்வு கிடையாது...ரூ.40 ஆயிரம் சம்பளம்..மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை..!

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் http://ignou.ac.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தைத் தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். SC/ST/PwBD பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க :  https://cuignourec.samarth.edu.in/

தபால் முகவரி:

The Director, Academic

Coordination Division, Indira Gandhi National Open University, Maidan Garhi, New Delhi - 110068.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.01.2023

தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பக் கடைசி நாள் : 10.02.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Assistant Professor, Government jobs, Teaching, University