40,889 கிராம அஞ்சல் பணியாளர் பதவிக்கான தகுதி பட்டியல் (Merit List) மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், GDS Online Portal தளத்தில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.
நாடு முழுவதும் கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டது. கடந்த 16ம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது தகுதி பட்டியலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாகி வருகிறது.
தகுதி பட்டியல் எப்படி தயாரிக்கப்படும்?
இந்த பதவிக்கு, எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merti List) தயாரிக்கப்படும். ஒருவேளை, 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எந்தவித மனித தலையீடுகள் இல்லாமல், தொழில்நுட்ப உதவியோடு இந்த பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது, மேலும், மத்திய அரசின் இடஒதுக்கீடு முறை இதில் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு:
தகுதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வாயிலாக தகவல் பரிமாறிக் கொள்ளப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். சரிபார்ப்பின் போது, தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் உறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.